சினிமா செய்திகள்

சந்தானத்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்!

Published

on

சந்தானம் நடிப்பில் இந்தாண்டு வெளிவந்த தில்லுக்கு துட்டு 2 காமெடி பேய் படம் செம ஹிட்டானது. மேலும் வசூல் ரீதியாகவும் சந்தானத்துக்கு சந்தோஷத்தை அளித்தது.

அடுத்ததாக அவர் ஏ1 எனும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது.

இந்நிலையில், அடுத்ததாக சந்தானம் பூமராங் பட இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் படம் ஒன்றில் கமீட் ஆகியுள்ளார்.

ஜெயம் கொண்டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ஆர். கண்ணன், அதற்கு பிறகு கண்டேன் காதலை, சேட்டை, ஒரு ஊருல ரெண்டு ராஜா, இவன் தந்திரன், பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதில், சில படங்கள் வெற்றியும், சில படங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும், காமெடி ஏரியாவில் கண்ணன் இதுவரையில் ஏமாற்றவில்லை.

கண்டேன் காதலை மற்றும் சேட்டை படங்களில் சந்தானம் செய்யும் அட்டாகாச காமெடிக்கு இதுவரை ஆடியன்ஸ் இருக்கின்றனர்.

இந்நிலையில், சந்தானத்தை நாயகனாக வைத்து கண்ணன் படம் இயக்குவதால், சந்தானம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக படம் அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version