சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் புதிய ஜோடி இவர்தான்!

Published

on

இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள சூப்பர் ஹீரோ கதையில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷினி ஜோடி சேர்ந்துள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷினி, தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது, தனது தந்தை மலையாளத்தில் மோகன்லாலை வைத்து பிரம்மாண்டமாக எடுத்து வரும் மரக்காயர் படத்திலும் கல்யாணிக்கு முக்கிய ரோலை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்கவுள்ள படத்திற்கு நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Trending

Exit mobile version