சினிமா

பிரபாஸின் பிறந்த நாள் பரிசு இதுதான்!

Published

on

பாகுபலி நாயகன் பிரபாஸின் 39வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய திரையுலக ஜாம்பவான்கள் தொடங்கி, நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரபாஸுக்கு சமூக வலை தளங்களில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாகுபலி’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நடிப்பில்’சாஹோ’ படம் உருவாகி வருகிறது. பாகுபலி 2விற்கு பிறகு பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்காக பிரபாஸ் ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டில் திரைக்கு வரவுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் மேக்கிங் வீடியோவான ஷேட்ஸ் ஆஃப் சாஹோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version