சினிமா செய்திகள்

அஜித்திற்கு பிறகு விமானம் ஓட்டும் லைசென்ஸ் வாங்கிய நடிகை இவர்தான்!

Published

on

தமிழ் சினிமாவில் விமானம் ஓட்டும் லைசென்ஸை பெற்றுள்ள ஒரே நடிகர் என்றால் அது நடிகர் அஜித் மட்டும் தான். அஜித்திற்கு அடுத்ததாக, 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாதவி தற்போது விமானம் ஓட்டும் லைசென்ஸ் வாங்கியுள்ளார்.

கமல் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக், காக்கி சட்டை, ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு மற்றும் தில்லு முல்லு ஆகிய படங்களில் நாயகியாக நடித்த காதலின் தீபம், பிசியாக நடித்துக் கொண்டிருந்த போதே, அமெரிக்க தொழிலதிபரை மணந்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

அதற்கு பிறகு கோலிவுட் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பல முறை முயற்சித்தும், நடிப்பு பக்கம் வர மறுத்து விட்டார். தற்போது, அவர் கணவர் சொந்தமாக வாங்கியுள்ள விமானத்தை ஓட்ட பழகி கொண்ட முன்னாள் நடிகை மாதவி, அதற்கான ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version