சினிமா செய்திகள்

இது தான் பார்த்திபன் விரும்பிய 96 படத்தின் கிளைமேக்ஸ்!

Published

on

96 படத்தின் 100வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நேற்று கலர்புல்லாக காதல் ததும்ப நடந்தது. இதில், கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்றார்.

பின்னர், 96 படத்தின் இறுதி வரை நான் ஒரு கிளைமேக்ஸை எதிர்பார்த்தேன், அல்லது அது ஒரு காட்சியிலாவது நடக்காதா என்று எதிர்பார்த்தேன்.. அதனை இப்போதாவது இந்த ஜோடி நிறைவேற்றுமா? என விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா கட்டிப்பிடிக்கும் காட்சியை தான் எதிர்பார்த்ததை பார்த்திபன் தெரிவித்தார்.

அவரது கட்டளைக்கு இணங்கி, நடிகர் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா இறுக கட்டித் தழுவிக் கொண்டனர்.

ராமும் ஜானுவும் இறுதியில் ஒன்றாக சேர்ந்து விட்டனர் என அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version