சினிமா

இவர்தான் ரியல் ராட்சசன்!

Published

on

ராம்குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில், ராட்சசனாக நடித்தது யார் என்ற ரகசியத்தைப் படக்குழு இன்று அறிவித்தனர்.

விஷ்ணு விஷால் கேரியர் பெஸ்ட் படமாக ராட்சசன் மாறியுள்ளது. இந்தப் படத்தில் பள்ளி மாணவிகளைக் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யும் ராட்சசன், வினோதா நோயால் பாதிக்கப்பட்டவராகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதனால், அவரது நிஜ முகம் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை.

படம் ரிலீசாகி 25 நாட்கள் ஆன நிலையில், எந்தவொரு தொலைக்காட்சிக்கும் பேட்டி அளிக்காமலும் இருந்த அவரை, படக்குழுவினரே இன்று நடைபெற்ற வெற்றி விழாவில் அறிமுகப்படுத்தினர். சரவணன் எனும் அந்தப் புதுமுக நடிகர் தான் ராட்சசனாக மிரட்டிய கிறிஸ்டோபர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Trending

Exit mobile version