இந்தியா

முகேஷ் அம்பானியை விட 4 மடங்கு சம்பளம் வாங்கும் இந்தியர்.. நம்ப முடியவில்லையா? இதோ முழு விபரங்கள்!

Published

on

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியை விட இந்தியர் ஒருவர் நான்கு மடங்கு சம்பாதிக்கிறார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த 2020 ஆம் ஆண்டு வரை ஆண்டு ஒன்றுக்கு 15 கோடி சம்பாதித்தார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தியர் ஒருவர் தற்போது ஆண்டுக்கு 57 கோடி சம்பளத்தில் வேலையில் சேர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட்கடந்த வாரம் இன்போசிஸ் முன்னாள் தலைவர் ரவிக்குமார் என்பவரை எஸ்இஓ மற்றும் வாரியத்தின் உறுப்பினராக நியமனம் செய்வதாக அறிவித்துள்ளது/ இரண்டு முக்கிய பணிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள ரவிகுமாருக்கு ஆண்டுக்கு 57 கோடி ரூபாய் சம்பளம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த கணக்கின்படி பார்த்தால் இந்தியாவின் முன்னணி முகேஷ் அம்பானியை விட இவர் அதிகம் சம்பாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரவிக்குமாருக்கு காக்னிசன்ட்நிறுவனம் 7,50,000 டாலர்கள் இணைந்த போனஸ் தர இருப்பதாகவும் இது இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்தில் 20 ஆண்டுகாலம் பணிபுரிந்த ரவிக்குமார் அதன் பிறகு சமீபத்தில் காக்னிசன்ட்சேர்ந்தார். அவர் பல்வேறு தலைமை பதவிகளை வகித்த அனுபவம் உள்ளவர் என்பதும் கடந்த 2016 முதல் 2022 வரைஇன்போசிஸ் நிறுவனத்தில் பல முக்கிய பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய தொழில் பிரிவு மற்றும் உலகளாவிய சேவைகள் குறித்த அனுபவத்தை பெற்றுள்ள ரவிகுமார், காக்னிசன்ட்நிறுவனத்தையும் முன்னணி நிறுவனமாக கொண்டு செல்வதில் சிறந்த பங்காளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப ஆலோசர்களான ரவிக்குமாரை தாங்கள் வரவேற்பதாக காக்னிசன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய நடைமுறைகளை அமல்படுத்துதல், பெரிய திட்டங்களையும் மாற்றத்திற்கு உள்ளாக்குதல், தொழில் பிரிவுகளில் புதிய வணிக மாதிரிகளை உருவாக்குதல், ஆகியவற்றில் ரவிக்குமார் ஈடுபடுவார் என்றும் இதன் மூலம் காக்னிசன்ட் வணிகம் பெருகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர் உறவுகள் மற்றும் கூட்டான்மையை வலுப்படுத்துவது, ஊழியர்களை திறம்பட நடத்துவது உள்ளிட்ட பல பணியை அவர் செய்துள்ளதை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்றும் காக்னிசன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரவிக்குமாரின் சம்பளம் குறித்து விவரங்களை தற்போது பார்ப்போம். வருடத்திற்கு ரூ.57 கோடி அடிப்படை சம்பளம். மேலும் 750,000 டாலர் வருட போனஸ். மற்றும் 11.5 மில்லியன் டாலர் இலக்கு மானிய தொகை மற்றும் 2 மில்லியன் டாலர் வருடாந்திர ஊக்கத்தொகை ஆகியவைகளை ரவிகுமார் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version