இந்தியா

இந்தியாவில் இந்த ஒரு மாநிலத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் நிரந்தர வருமான வரி விலக்கு.. ஏன் தெரியுமா?

Published

on

ஒரு நாட்டின் அரசு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் அதற்கு, அந்த நாட்டின் குடிமக்கள் முறையாக வரி செலுத்த வேண்டும். ஆனால் இந்தியாவில் இந்த ஒரு மாநிலத்தவர்களுக்கு மட்டும் நிரந்தர வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்தியாவின் மிகச் சிறந்த வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் குடிமக்களுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10(26AAA) இன் கீழ் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

This Indian State Residents Exempted To Pay Income Tax, Do Know Why?

சிக்கிம் ராஜ்ஜியம் இந்தியாவில் இணைக்கப்பட்ட போது, இந்திய அரசியலமைப்பு சட்டம்371 (எஃப்) பிரிவின் கீழ் அவர்களது பழைய சட்டங்களே தொடரும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி சிக்கிமில் தங்களுக்கு என சொந்த வரி விதிமுறைகளைக் கொண்டுள்ளது. மேலும் இம்மாநிலத்தின் மக்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய கூட பான் கார்டு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பான் கார்டிலிருந்தே இவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

1975-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சிக்கிமில் நிரந்தமாகக் குடியேறியவர்களுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் உச்ச நீதிமன்றம் பிரிவு 10 (26AAA)க்கு விளக்கங்களை மாற்றுமாறு உத்தரவிட்டது.

அதன்படி, சிக்கிம் மாநில அரசு 1975-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதிக்கு முன்பு வரை அம்மாநிலத்தில் நிரந்தரமாகக் குடியேறிய இந்தியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version