பல்சுவை

மீந்துபோன அரிசி சோற்றை அடுத்தநாள் புதிது போல மாற்றுவது எப்படி தெரியுமா?- ஈஸி டிப்ஸ்

Published

on

தமிழர்களால் எதுவேண்டுமானாலும் இல்லாமல் இருந்துவிட முடியும். ஆனால், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அரிசி சோற்றைச் சாப்பிடாமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு நம் வாழ்க்கையோடு ஒட்டிப் போனது அரிசி சோறு. தினமும் வீடுகளில் நாம் வைக்கும் சோறு, சில நாட்கள் மீறுவது உண்டு. அதைப் பெரும்பாலும் தண்ணீர் ஊற்றிவைத்து, அடுத்த நாள் பழைய சோறாக சாப்பிடும் பழக்கம் நம்மில் ஏராளமானவர்களுக்கு இருக்கும்.

அதே நேரத்தில் ஒரு நாளுக்கு முன்பு வைத்த சோற்றை, ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் பயன்படுத்தவும் நாம் நிறைய முறை முயற்சித்திருப்போம். ஆனால், முதல் நாளில் பூ பூவாக அவிந்திருந்த அரிசி, அடுத்த நாள் கொட்டை கொட்டையாக மாறிவிடும். அதைச் சாப்பிடுவது அவ்வளவு உவப்பான விஷயமாக இருக்காது.

ஒரு நாள் மீந்துபோன அரிசியை, அடுத்த நாளும் ஃபிரஷ்ஷாக மாற்ற ஒரு சுலபமான வழி உள்ளது.

ஃப்ரிட்ஜில் இருந்து அரிசியை வெளியே எடுத்தப் பின்னர், அதன் மீது ஒரு ஐஸ் கட்டியை வைத்து, மைக்ரோவேவ் அவனில் மென்சூட்டில் வைக்க வேண்டும். ஐஸ் கட்டி முழுதாக கரைந்து, அரிசி சோற்றை நல்லப் பதத்திற்கு வேக வைத்திருக்கும். இது சாப்பிடும் போது புதியது போலவே தோன்றும். இந்த டிப்ஸை ஒரு முறை ஃபாலோ செய்து தான் பாருங்களேன்.

 

Trending

Exit mobile version