வைரல் செய்திகள்

உரிமையாளர் வருவார் என ஒரே இடத்தில் 6 நாட்களாக தொடர்ந்து காத்திருந்த நாய்!

Published

on

துருக்கியில் உரிமையாளருக்காக அவருடைய நாய் ஒரே இடத்தில் 6 நாட்களாக தொடர்ந்து காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ப்புப் பிராணிகளில் நாய் போல் நன்றியுள்ள ஜீவன் கிடையாது என்பார்கள். ஒரு தடவை உணவு கொடுத்து, பாசம் காட்டினால் போதும். எவ்வளவு நாட்கள் ஆனாலும் நம்மை மறக்காது. நம்மை பார்த்த உடனையே வால் ஆட்டிக்கொண்டு பாசத்தில் குரைக்கும். இதனை மெய்ப்பிக்கும் விதமாக துருக்கியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

துருக்கியில் திராப்சான் நகரில் வடகிழக்குப் பகுதியில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 68 வயது நிரம்பிய சிமல் சென்டரக் என்பவர் மூளை அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அவருடைய வளர்ப்பு நாய் போன்கக் என்ற கலப்பின நாயும் மருத்துவமனை வந்தது.

சிமல் மருத்துவமனையிலேயே ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். உரிமையாளர் வராததால் அந்த நாயோ மருத்துவமனை வாசலிலயே இருந்தது. ஒரு நாள், இரண்டு நாள் இல்லாமல் கிட்டத்தட்ட 7 நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே அழுது கொண்டு இருந்துள்ளது.

நாயைப் பார்த்து பரிதாபப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள், சிமலுக்கு சிகிச்சை முடிந்தது 7 வது நாளில் அவருடைய படுக்கைகக்கு நாயை அழைத்துச் சென்றனர். உரிமையாளரைப் பார்த்ததும் உற்சாகம் தாளாமல் நாய் அங்குமிங்கும் ஓடியது. மேலும், உரிமையாளருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் உணர்ந்து அதற்கு ஏற்ப முகத்தை வைத்திருந்தது.

Trending

Exit mobile version