தமிழ்நாடு

தமிழ்நாட்டிலேயே அதிக கொரோனா தடுப்பூசிகள் போட்டது சென்னையில் உள்ள இந்த தொகுதியில்தான்!

Published

on

தமிழ்நாட்டில் உள்ள சட்ட மன்றத் தொகுதிகளிலேயே சென்னையில் உள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தான் அதிக நபர்களுக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் போடப்பட்டு உள்ளது எனத் தகவல் வந்துள்ளது.

இந்த தொகுதியில் இதுவரை 90,000 கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மக்களுக்குச் செலுத்தப்பட்டு இருக்கிறதாம். இந்த தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராக பதவியேற்று இருப்பவர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் ஆவார். அவரின் தொடர் முயற்சிகளைத் தொடர்ந்து தான் இந்த தொகுதி மக்கள் ஆர்வமாக முன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்களாம். இதற்காக அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அதே நேரத்தில் இன்று முதல் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘மாநிலத்தின் பல இடங்களில் தடுப்பூசிகள் இல்லை என்று பெயர் பலகைகள் வைத்துள்ளோம். இது உண்மையில் உள்ளபடியே பெரும் வருத்ததைத் தான் தருகிறது. நகர்ப் புறங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும், மலைவாழ் பகுதிகளிலும், படிக்காதவர்களும் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமாக உள்ளார்கள். ஆனால், பல இடங்களில் தடுப்பூசிகள் இல்லை என்பது தான் நிதர்சனம்.

1 கோடியே 44 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 1 கோடியே 41 லட்சம் தடுப்பூசிகள் போட்டு முடிக்கப்பட்டு உள்ளன. மீதம் இருக்கும் தடுப்பூசிகள் இன்றோடு முடிந்துவிடும். எனவே, போடுவதற்கு நம்மிடம் எங்கேயும் தடுப்பூசிகள் இல்லை’ என்று வருத்தத்துடன் கருத்து கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version