இந்தியா

இந்தியாவில் ‘வாழ மிக ஏற்ற நகரம்’ இதுதானாம்!

Published

on

இந்திய அளவில் ‘மிக சாந்தமாக வாழக் கூடிய’ (Ease of Living Index’) நகரங்களின் பட்டிலயை தயார் செய்துள்ளது மத்திய அரசு. அந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது பெங்களூரு நகரம்.

பெங்களூருவைத் தொடர்ந்து புனே, அகமதாபாத், சென்னை, சூரத், நவி மும்பை, கோயம்புத்தூர் மற்றும் வதோதரா ஆகிய நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலை மத்திய வீட்டு வசதித் துறை மற்றும் நகர விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி வெளியிட்டுள்ளார்.

இந்தப் பட்டியலைப் பொறுத்தவரை 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரமாக இருப்பது சிம்லா எனத் தெரிய வந்துள்ளது.

10 லட்சத்திற்கும் குறைவான ஜனத் தொகை கொண்ட நகர முனிசிபல் கவுன்சில் செயல்பாடு குறியீட்டில் புது டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகர முனிசிலப் கவுன்சில் செயல்பாடு குறியீட்டில் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது.

டாப் 10 ‘மிக சாந்தமாக வாழக் கூடிய’ நகரங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version