தமிழ்நாடு

திருவாரூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியா?

Published

on

திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி இறந்ததையடுத்து அவரது திருவாரூர் தொகுதி காலியான தொகுதி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம்.

காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காமல் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்ததில் உள்நோக்கம் உள்ளதாக பல கட்சிகள் விமர்சிக்கின்றன. இருந்தாலும் கட்சிகள் திருவாரூர் தொகுதிக்கு வேட்பாளரை நிறுத்த தீவிரமாக களமிறங்கியுள்ளது.

குறிப்பாக திமுகவில் வேட்பாளர் தேர்வில் பெரும் குழப்பம் உள்ளது. கலைஞரின் தொகுதியில் திமுக நிச்சயம் வென்றாக வேண்டிய சூழலில் உள்ளது. எனவே மு.க.ஸ்டாலின் நின்றால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு அதில் உடன்பாடு இருப்பதாக தெரியவில்லை.

நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது நானா, துரைமுருகனா அல்லது டி.ஆர். பாலுவா என்பது வரும் 4-ம் தேதி தெரியும் என்றார். மேலும் திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகி விட்டோம் என்றார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version