தமிழ்நாடு

கார்த்திகை தீப விழாவிற்கு பக்தர்கள் அனுமதி உண்டா? திருவண்ணாமலை கலெக்டர் அறிவிப்பு

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக கோயில் திறக்கப்பட வில்லை என்பதும் ஒரு சில கோயில்கள் திறந்தாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது

அது மட்டும் இன்றி அனைத்து திருவிழாக்களும் பக்தர்கள் அனுமதி இல்லாமலேயே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகளே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இந்த ஆண்டு திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் தினத்தில் பக்தர்கள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது கடந்த ஆண்டு பக்தர்கள் இல்லாமல் திருக்கார்த்திகை தீப விழா நடந்த நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் திருவண்ணாமலை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக இரண்டாவது ஆண்டாக திருக்கார்த்திகை தீபம் விழாவுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் வெளியூர் பக்தர்கள் ஆன்லைன் மூலம் கட்டணமில்லா முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்றும் திருவண்ணாமலை ஆட்சியர் தெரிவித்துள்ளார்

seithichurul

Trending

Exit mobile version