தமிழ்நாடு

கொள்ளையடித்தவர் மனைவியுடன் போட்ட நாடகம்: திருவான்மியூர் ரயில்நிலைய கொள்ளையில் திடீர் திருப்பம்

Published

on

நேற்று சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் திடீரென கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொள்ளை அடித்தவரே கொள்ளை போனதாக நாடகமாடியது தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எப்போதும் பெரும் பரபரப்பாக இருக்கும் திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நேற்று திடீரென கொள்ளையர்கள் புகுந்து 1.32 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது ரயில் நிலைய ஊழியர் ஒருவர் கட்டிப் போடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. முதல்கட்ட விசாரணையில் ரயில்வே ஊழியரை கட்டிப்போட்டு விட்டு அங்கிருந்த பணத்தை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து கட்டி போடப்பட்டிருந்த ரயில் நிலைய ஊழியர் டீக்காராம் என்பவரிடம் விசாரித்த போது அவரும் அவருடைய மனைவியும் இணைந்து தான் இந்த கொள்ளையை நடத்தியது அம்பலம் ஆனது. ரயில் நிலைய ஊழியர் டீக்காராமை அவரது மனைவியே கட்டி போட்டு விட்டு பணத்தை கொள்ளை அடித்து சென்று விட்டு, யாரோ கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டதாக நம்ப வைக்க நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.
டீக்காராம் மனைவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நாடகம் அம்பலமானதை அடுத்து ரயில் நிலைய ஊழியர் டீக்காராம் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேலும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொள்ளையடித்தவரே கொள்ளை போனதாக நாடகமாடிய சம்பவம் திருவாரூர் ரயில் நிலைய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஆகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version