இந்தியா

முன்பதிவு செய்யும் அனைவருக்கும் அனுமதி: சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு!

Published

on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பதும் தினமும் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மகரஜோதியை முன்னிட்டு அன்றைய ஒருநாள் மட்டும் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் ஆனந்தன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் தினசரி 60 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. உடனடி தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசன அனுமதி வழங்கவும் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், எரிமேலி, நிலக்கல், கோட்டயம், கொட்டாரக்கரை உள்ளிட்ட 10 இடங்களில் உடனடியாக தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகரவிளக்கு பூஜையை அடுத்து அன்றைய தினம் மிக அதிகமான மக்கள் கூடுவார்கள் என்றாலும் அன்றைய தினம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மகரஜோதி அன்று தரிசனம் செய்ய விரும்பும் ஐயப்ப பக்தர்கள் உடனடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ஐயப்பனை தரிசிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 

Trending

Exit mobile version