இந்தியா

நாடாளுமன்றத்தில் ஜெய் பீம்.. அல்லாஹு அக்பர் என முழங்கிய திருமாவளவன்!

Published

on

நாடாளுமன்றத்தில் ஜெய்பீம் மற்றும் அல்லாஹு அக்பர் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முழங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்: காலங்காலமாக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களான எஸ்சி எஸ்டி மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது அரசின் ஒரு கொள்கை நிலைப்பாடு

5 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் பழங்குடியினருக்கு மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்த மண்ணின் மைந்தர்களான பட்டியல் சாதியினருக்கு மக்கள் தொகை அடிப்படையில் நிதி உதவி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய பட்ஜெட்டில் எதுவும் இல்லை.

இன்றைக்கு கர்நாடக மாநிலத்தில் எந்த அளவுக்கு பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பிரச்சனைகள் வளர்ந்து இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இது ஒரு பள்ளி கல்லூரிக்கு நிலைப்பாடு அல்ல அல்லது கர்நாடக மாநில அரசின் நிலைப்பாடு அல்ல, இது இந்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது

நாடு முழுவதும் மத அரசியல் நடந்து வருகிறது. பள்ளி மாணவர்களை மதத்தை வைத்து பிரிவினை தோன்றுவது ஏற்புடையது அல்ல. ஆர்எஸ்எஸ் சங்பரிவார் உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்

20 லட்சம் முஸ்லிம்களை கொல்வோம் என ஹரித்துவாரில் பேசுகிறார்கள். பிரதமர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார், உள்துறை அமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார், அது குறித்து இதுவரை எந்த கருத்தையும் கூறவில்லை

இஸ்லாமிய பெண்கள் அரசியலமைப்பு சட்டம் தரும் உரிமையின் அடிப்படையில் தான் ஹிஜாப் அணிகிறார்கள் என்று கூறிய திருமாவளவன் அல்லாஹு அக்பர், ஜெய்பீம் என முழங்கி தனது பேச்சை முடித்தார்,.

 

seithichurul

Trending

Exit mobile version