தமிழ்நாடு

பேரறிவாளன் குற்றவாளியா? நிரபராதியா? செய்தியாளர் கேள்விக்கு திருமாவளவன் பதில்!

Published

on

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 31 ஆண்டுகளாக சிறையில் இருந்து பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியா? அல்லது நிரபராதியா? என்பது குறித்து திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனை அடுத்து அவரை ஆரத்தழுவி முதலமைச்சர் வரவேற்றார்.

முன்னாள் பிரதமரை கொலை செய்த ஒருவரை முதலமைச்சராக வரவேற்கலாமா என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்தது. இது குறித்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களிடம் செய்தியாளர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் நிரபராதி என நீதிமன்றம் கூறவில்லையே என கேட்டபோது, ‘நீதிமன்றத்தில் பேரறிவாளன் குற்றவாளி எனவும் நீதிபதி தெரிவிக்கவில்லை என்றும் எனவே நாம் அதை நிரபராதி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார் .

எனவே முதல்வர் அவரை ஆரத்தழுவி வரவேற்றதில் தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அரசியல் காரணங்களுக்காக பேரறிவாளன் விடுதலை செய்யப்படவில்லை என்றும் சட்டப்படிதான் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அதனால் பேரறிவாளன் குற்றமற்றவர் என்றும் தெரிவித்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version