தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் நடந்தால் தீவிரவாதம்? திமுக ஆட்சியில் நடந்தால் ரூ.25 லட்சமா? திருமாவளவனுக்கு நெட்டிசன்கள் கேள்வி!

Published

on

அதிமுக ஆட்சியில் போலீஸ் விசாரணையின்போது ஒருவர் மரணமடைந்தால் தீவிரவாதம் என பேசுவதும் இதே திமுக ஆட்சியில் விசாரணை கைதி மரணமடைந்தால் பத்து லட்சத்திற்கு பதிலாக 25 லட்சம் இழப்பீடு தாருங்கள் எனக் கூறுவது நியாயமா என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சாத்தான்குளம் தந்தை மகன் ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது டுவிட்டரில், ‘சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் சில காவலர்கள் தாக்கியதில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பலி. போலீஸை எதிர்த்துப் பேசியதற்காக இந்த படுகொலை. கொரோனாவால் சாகக்கூடாது என்று கடையை மூடச் சொல்லி அவர்கள் இந்த இரட்டை கொலை செய்துள்ளனர். இது மாநில தீவிரவாதம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் கோவையில் மாற்றுத்திறனாளி பிரபாகரன் என்பவர் அதேபோல் போலீஸ் காவலில் மரணமடைந்தது குறித்து கருத்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த திருமாவளவன், ‘பொங்கல் விழாவையும் பொருட்படுத்தாமல் சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில பொறுப்பாளர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக பிரபாகரன் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிதியை 25 லட்சமாக வழங்க வேண்டுகிறோம் என்று தெரிவித்திருந்தார். அதிமுக ஆட்சியில் தீவிரவாதம் என கூறிய திருமாவளவன் திமுக ஆட்சியில் அதிக பணம் கேட்பது நியாயமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேபோல் சாத்தான்குளம் மரணம் குறித்து கருத்து தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள், ‘இந்த படுகொலைக்கு முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறினார். தற்போது அதேபோல் போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்ந்த மரணத்திற்கு இப்போதைய முதல்வர் தானே பொறுப்பை ஏற்க வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version