தமிழ்நாடு

நடிகர்கள் போலவே கோட்சூட்டுடன் போட்டோஷூட் நடத்திய திருமாவளவன்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

திரையுலகைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது தங்களது மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொள்ளவும் புதிய வாய்ப்புகளைப் பெறவும் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வார்கள் என்பது தெரிந்ததே.

கிட்டத்தட்ட அனைத்து நடிகைகளும் அவ்வப்போது போட்டோஷூட் எடுப்பார்கள் என்பதும் நடிகர்கள் அபூர்வமாக போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து பதிவு செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசியல் தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான திருமாவளவன் அவர்களும் நடிகர்களைப் போலவே போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை எம்பியுமான திருமாவளவனின் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பார்த்து அவரது கட்சியினர் மட்டுமின்றி மாற்றுக் கட்சியினரும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

அச்சு அசலாக மாஸ் நடிகர் போலவே இருக்கும் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்த பலரும் திருமாவளவன் தாராளமாக திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் என்று கமென்ட் அளித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version