தமிழ்நாடு

நாற்காலி மீது ஏறி நடந்தது ஏன்? திருமாவளவன் விளக்கம்!

Published

on

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் தரை மீது தனது கால் படாமலிருக்க நாற்காலிகள் மீது நடந்து சென்றார் என்பதும் அவரது கால் வெள்ள நீரில் நனைந்து விடாமல் இருக்க தொண்டர்கள் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் சென்று காரில் அமர வைத்தார்கள் என்பதும் தெரிந்ததே.

இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் கட்சித் தொண்டர்களை அடிமைபோல் நடத்துகிறார் திருமாவளவன் என்று பாஜக உள்ளிட்ட ஒருசில கட்சியின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நாற்காலி மீது ஏறி நடந்தேன்; நான் கீழே விழாமல் சக தொண்டர்கள் பார்த்து கொண்டார்கள்; அடிமைப்படுத்தும் எண்ணம் எப்போதும் இல்லை”.

நான் தங்கியுள்ளது என் வீடு அல்ல; அது எங்கள் அறக்கட்டளை அலுவலகம், ஒவ்வொரு மழையின்போது மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து வரும்; அந்த சமயங்களில் கூட நான் என் தொண்டர்களை விட்டு அங்கிருந்து சென்றதில்லை”.

அடிமைப்படுத்துதல் போன்ற மனநிலை எனக்கு இல்லை என்பது என் மீது குற்றம்சாட்டும் பாஜக போன்ற கட்சிகளுக்கு தெரியும்; பேசவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு எங்கள் மீது திட்டமிட்டு
அவதூறு பரப்புகிறார்கள்.

Trending

Exit mobile version