தமிழ்நாடு

3வது அலை ஆரம்பித்துவிட்ட நிலையில் நீட் தேர்வா? திருமாவளவன் கண்டனம்

Published

on

மூன்றாவது அலைய ஆரம்பித்து விட்டதாக ஏற்கனவே மருத்துவர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது நீட்தேர்வு அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது முரண்பாடாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது என மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கும் நிலையில் மத்திய அரசு செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீட் தேர்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

மூன்றாவது அலை ஜூலை 4ஆம் தேதி ஆரம்பித்து விட்டதாக ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர் என்றும், கான்பூர் ஐஐடியில் நடத்தப்பட்ட ஆய்வில் மூன்றாவது அலை செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும் என்றும் அப்போது தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது மாணவர்களின் உயிரைப் பற்றிய கவலை படாதே காட்டுகிறது என்று அவர் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நீட்தேர்வு நடந்தே தீரும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ளது என்பதும் இன்று முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version