இந்தியா

அனுமன் பிறந்தது திருமலையில் தான்: ஆதாரத்தை வெளியிட்ட தேவஸ்தானம்!

Published

on

ஆஞ்சநேயர் பிறந்த இடம் திருமலை திருப்பதி மலை தான் என சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில் தற்போது இது குறித்த ஆதாரத்தை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதியில் உள்ள ஏழு மலைகளில் ஒன்று அஞ்சனாசலம் எனப்படும் அஞ்சனாத்திரி. இந்த மலையில்தான் அனுமனின் தாயான அஞ்சனை தவம் செய்தார் என்றும் அப்போதுதான் அனுமன் பிறந்தார் என்றும் கூறப்படுவது உண்டு.

இதனை உறுதி செய்ய சமீபத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் 6 நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து புராணங்களை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் கிடைத்த ஆதாரத்தை தற்போது வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்த போது அனுமன் பிறந்த இடம் குறித்த ஆய்வு நிறைவடைந்து விட்டதாகவும் அதன் முடிவில் அஞ்சனாசலம் எனப்படும் அஞ்சனாத்திரி என்ற மலையில் தான் அனுமன் பிறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சற்று முன் திருமலை திருப்பதி கோவிலில் அமைந்துள்ள சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான் அனுமனின் பிறப்பிடம் என நான்கு மாத ஆய்வுக்குப்பின் திருப்பதி தேவஸ்தானம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version