இந்தியா

24ஆம் தேதி வரை இலவச தரிசன டிக்கெட் இல்லை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Published

on

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 24ஆம் தேதி வரையிலான இலவச தரிசன டிக்கெட்டுக்களின் விற்பனை முடிந்து விட்டதாகவும் எனவே பக்தர்கள் திருமலைக்கு வந்தால் மூன்று நாட்கள் காத்திருந்துதான் தரிசனம் செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்களில் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் இருப்பினும் நாளொன்றுக்கு 15 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் பிப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஏழுமலையானை வழிபடும் வகையில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் 24ஆம் தேதிக்கு பின்னரே உள்ள இலவச தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே இனி வழங்கப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

எனவே இன்று டிக்கெட் வாங்காமல் வரும் பக்தர்கள் 3 காத்திருந்துதான் ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருக்கும் என்றும் இதனை கவனித்து திருப்பதி வரை இருக்கும் பக்தர்கள் தங்கள் பயண திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version