சினிமா செய்திகள்

தனுஷின் அடுத்த பட டைட்டில் இதுதான்: குஷியில் ரசிகர்கள்!

Published

on

தனுஷ் நடிக்கவிருக்கும் 44வது திரைப்படம் குறித்த தகவல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று முதல் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இந்த படத்திற்கு ’திருச்சிற்றம்பலம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர் என்பதும் அவர்கள் நித்யாமேனன், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் ’திருச்சிற்றம்பலம்’ என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இதுகுறித்த ஹேஷ்டேக்கை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இன்றைய டைட்டில் வீடியோவில் அனிருத் இசையமைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மித்ரன் ஜவஹர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதை அடுத்து இந்த ஆண்டுக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version