தமிழ்நாடு

இந்தியாவில் கொரோனா 3வது அலை எப்போது? விஞ்ஞானிகள் கணிப்பு!

Published

on

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரனோ முதல் அலை ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் இரண்டாவது அலை உருவாகி ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

முதல் அலையை விட இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அலை எப்போது தொடங்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் கணித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இரண்டாவது அலை ஜூலை மாதம்தான் முடிவுக்கு வரும் என்றும் மே மற்றும் ஜூன் மாதம் மிக அதிகமாக கொரோனா பரவல் இருக்கும் என்றும் கணித்துள்ளனர். குறிப்பாக உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் இந்தியாவில் மூன்றாவது அலை வரும் என்றும் ஆனால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது என்றும் மூன்றாவது அலை தொடங்கும்போதுதான் அது குறித்து ஆய்வு செய்ய முடியும் என்றும் கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்தியாவில் வரும் அக்டோபரில் மூன்றாவது அலை ஏற்படும் என்றும் கூறப்படுவது அடுத்து 2021ஆம் ஆண்டும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய சிக்கலான வருடமாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version