கிரிக்கெட்

மூன்றாவது டெஸ்ட்: இந்தியா அணி தடுமாற்றம் 70/6

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ள இந்திய அணி 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றது.

#image_title

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் பேட்டிங் இந்திய அணிக்கு கைகொடுக்கவில்லை. 27 ரன்னில் முதல் விக்கெட்டாக ரோகித் ஷர்மா வெளியேற அடுத்தடுத்து ஆட்டம் காண ஆரம்பித்தது இந்திய பேட்டிங் வரிசை. அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சியால் 45 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. இதனால் தடுமாறி வரும் இந்திய அணியை மீட்க விராட் கோலியும், விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத்தும் போராடினர். இந்த போராட்டமும் பலனளிக்கவில்லை. 70 ரன்னில் 6-வது விக்கெட்டாக விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அக்சர் பட்டேல் தற்போது களமிறங்கியுள்ளார். இந்த போட்டியிலும் அக்சர் சிறந்த பங்களிப்பை கொடுத்தால் இந்திய அணி சற்று ஆறுதலான ஸ்கோரை எட்ட முடியும். ஆஸ்திரேலிய அணி சிறப்பாக பந்துவீசி இந்திய பேட்டிங்கை நிலைகுலைய வைத்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் மேத்திவ் ஹுனெமன் 3 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். தற்போது இந்திய அணி 82 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தொடர்ந்து போராடி வருகிறது.

Trending

Exit mobile version