இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 3வது மலைப்பாதை: தேவஸ்தான அதிகாரிகள் தகவல்!

Published

on

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு ஏற்கனவே 2 மலைப்பாதைகள் இருக்கும் நிலையில் மூன்றாவது மலைப்பாதை விரைவில் அமைக்கப்படும் என திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக திருப்பதிக்கு செல்லும் இரண்டு மலைப்பாதைகளிலும் மண் சரிவு ஏற்பட்டது என்பதும் இதனால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருப்பதி மலை கோவிலுக்கு மூன்றாவது மலை பாதை அமைக்கப்படும் என தேவஸ்தான உயரதிகாரி தெரிவித்துள்ளார். இன்று இதுகுறித்து தேவஸ்தான குழுவின் தலைவர் சுப்பா ரெட்டி அவர்கள் பேட்டி அளித்தபோது திருமலையை கடப்பா உடன் இணைக்கும் வகையில் வனப்பகுதி வழியாக மூன்றாவது மலைப்பாதை ஏற்படுத்தப்படும் என்றும் இதற்காக அங்கிருந்த நடைபாதை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மூன்றாவது பாதைக்காக விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஏற்கனவே இருக்கும் இரண்டு மலைப்பாதைகளும் சமீபத்தில் பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதை சீர் அமைப்பதற்காக 3 கோடியே 95 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, மூன்று வாரங்களில் சீரமைக்கும் பணி முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் மலைப்பாதைகளில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க சென்னை ஐஐடி நிபுணர்களிடம் இருந்து ஆலோசனை பெறப்பட்டு, அடுத்தடுத்து பெய்யும் மழைகளின் போது மண்சரிவு ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version