உலகம்

கொரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் தேவைப்படுமா? தொற்றுநோய் நிபுணர் தகவல்

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக தற்போது இரண்டு டோஸ்கள் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பதும், ஒரு சில தடுப்பு ஊசிகள் ஒரு டோஸ் மட்டும் போட்டால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.

ஆனால் அமெரிக்காவில் உள்ள தொற்றுநோய் நிபுணர் ஆண்டன் ஃபெளச்சி என்பவர் அமெரிக்காவில் வரும் மாதங்களில் மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி தேவைப்படும் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவர்களின் தலைமை மருத்துவ ஆலோசகரும் தொற்றுநோய் நிபுணருமான ஆண்டன் ஃபெளச்சி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது ’இப்போது உள்ள டேட்டாக்களின் அடிப்படையில் மக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி தேவையில்லை என்றாலும் மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி வேண்டுமா என்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் அதற்கான டேட்டாக்கள் கிடைக்கும்போது வயது மற்றும் உடல் நிலையை பொருத்து மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது 48% பேர் முழுமையாக 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் என்றும் நாட்டின் பல பகுதிகளில் நோய் தொற்று தற்போது குறைந்து வருவதாகவும் ஆனால் அதே நேரத்தில் டெல்டா வகை வைரஸ் மட்டும் சற்று அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஃபைசா், கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்களை தொடர்ந்து இன்னும் ஒரு வருடத்தில் கூடுதலாக ஒரு டோஸ் தடுப்பூசி போடவேண்டும் என்றும் அதற்கு அங்கீகாரம் வேண்டும் என்றும் அமெரிக்க அரசிடம் விண்ணப்பம் செய்தது. ஆனால் தற்போதைய நிலையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையில்லை என ஃபைசா், கரோனா ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பத்தை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போதைக்கு மூன்றாவது டோஸ் தேவை இல்லை என்றாலும் வரும் நாட்களில் மூன்றாவது டோஸ் கண்டிப்பாக அமெரிக்க மக்களுக்கு தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version