இந்தியா

இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.. முழு விவரங்கள்!

Published

on

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் பங்கேற்க உள்ளனர்.

மத்திய அரசின் இந்த புதிய நாடாளுமன்ற கட்டட திட்டத்திற்காக 971 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு கட்டிட பணிகள் நிறைவடையும்.

பூமி பூஜை நிகழ்வு:

1) புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா, இன்று பிற்பகல் 12:55 மணியளவில் நடைபெற உள்ளது.
2) பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா சரியாக 1 மணியளவில் நடைபெறும்.
3) பிரார்த்தனைக் கூட்டமும் மதியம் 1:30 மணி வரை நடைபெறும்.
4) பிரதமர் மோடி 2:15 மணியளவில் உரையாற்றுவார்.
5) சில மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்கள் வீடியோ கன்ஃபரசிங் மூலம் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

பழைய நாடாளுமன்றம் கட்டி முடித்து 100 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. இந்தியா 75-வது சுதந்திர விழாவைக் கொண்டாடும் போது, நாடாளுமன்ற கூட்டம் புதிய கட்டிடத்தில் நடைபெறும். பழைய நாடாளுமன்ற கட்டிடம் 2022-ம் ஆண்டுக்குப் பிறகு தொல்பொருள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இந்தியாவின் புராதன சின்னமாகப் பராமரிக்கப்படும். டாடா நிறுவனம் இந்த கட்டடத்தைக் கட்டுவதற்கான திட்டத்தை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளது.

புதிய நாடாளுமன்றத்தின் அம்சங்கள்:

1) புதிய நாடாளுமன்ற கட்டிடம் 64,000 சதுர மீட்டர் அளவில் கட்டப்படுகிறது.
2) புதிய கட்டிடத்தில் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு பெரிய அரசியலமைப்பு மண்டபமும் இருக்கும்.
3) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறை இதிலேயே இருக்கும்.
4) நூலகம்
5) 1,224 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து விவாதிக்கக் கூடிய அளவிலான மண்டபம் இருக்கும். இப்போது உள்ள கட்டிடத்தில் அதிகபட்சம் 888 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அமர்ந்து விவாதிக்க முடியும்.
6) பல குழு அறைகள்
7) உணவு அருந்தப் பரந்த பகுதி, வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதி.

தற்போது பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்றம் குறித்த தெரிந்துகொள்ள வேண்டியவை:

1) ஆங்கிலேயர் காலத்தில் எட்வின் லுடியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டது.
2) 1921-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டி, 1927-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி திறப்பு விழா நடைபெற்றது. அப்போது இந்தியா ஆளுநராக இருந்த லார்டு ஐர்வின் திறந்து வைத்தார்.
3) அப்போது இந்த கட்டிடத்தைக் கட்ட 83 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. கட்டிடப் பணி முடிய 6 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.

Trending

Exit mobile version