வணிகம்

செல்வ இடைவெளியைக் குறைக்க அமெரிக்கா கொண்டு வந்த அதிரடி வரி.. அதிர்ச்சியில் உலக கோடீஸ்வரர்கள்!

Published

on

செல்வந்தர்களிடமே, செல்வம் சேர்வதைக் கட்டுப்படுத்த ‘Ultra-Millionaire Tax Act’ என்ற புதிய வரியை அமெரிக்கா அறிமுகம் செய்துள்ளது.

உலகளவில் அதிக செல்வந்தர்கள் உள்ள நாடு என்றால் அது அமெரிக்கா. அங்கு 1 லட்சத்துக்கு மேற்பட்ட செல்வந்தர்கள் உள்ளனர். இப்படி செல்வந்தர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை ஒழுங்கு படுத்த அமெரிக்க அரசு ‘Ultra-Millionaire Tax Act’என்ற வரியை முன்மொழிந்துள்ளது.

புதிய Ultra-Millionaire Tax Act என்ற வரி திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் 50 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரை செல்வ மதிப்பு உள்ளவர்கள் ஆண்டுக்கு 2 சதவீத வரி செல்வ வரி செலுத்த வேண்டும்.

இதுவே 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செல்வ மதிப்பு உள்ளவர்கள் கூடுதலாக 2 சதவீதம் என 3 சதவீதம் செல்வ வரி செலுத்த வேண்டும்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் எலன் மஸ்க், ஜெஃப் பிசோஸ், பெர்னார்ட் அமவுல்ட், பில் கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க், வாரன் பஃபெட் உள்ளிட்டவர்கள் முதல் 6 இடத்தில் உள்ளனர்.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார்.

Trending

Exit mobile version