பர்சனல் ஃபினான்ஸ்

‘சவரன் தங்கப் பத்திரம்’ திட்டம் மூலம் நாளை முதல் தங்கம் விற்பனை.. முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்!

Published

on

சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தின் 2020-2021 நிதியாண்டுக்கான 10வது வெளியீடு ஜனவரி 11-ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது. இதன் கீழ் ஜனவரி 15-ம் தேதி வரை தங்கத்தை பத்திரமாக வாங்கலாம்.

சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தில் 1 கிராம் தங்கத்தை, 5104 ரூபாய்க்கு வாங்க முடியும். 15-ம் தேதிக்குள் பணத்தை செலுத்தினால் ஜனவரி 19-ம் தேதி முதல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தங்க நகைகளை போன்றே இந்த தங்கம் பத்திரத்தையும் அடகு வைத்து கடன் பெற முடியும். சுத்த தங்கத்தின் விலையில் தான் சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இரண்டும் சேர்ந்து சவரன் தங்கம் பத்திரத்தை வெளியிடுகின்றன.

சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தின் கீழ் தங்கம் வாங்கும் போது கிராம் 1-க்கு 50 ரூபாய் சலுகை வழங்கப்படும். எனவே குறைந்தது 5,054 ரூபாய்க்கு 1 கிராம் சுத்த தங்கத்துக்கு நிகரான தங்கத்தைப் பத்திரம் வழியாக வாங்கலாம்.

டிசம்பர் 28-ம் தேதி 1 கிராம் சவரன் தங்கம் 5000 ரூபாய் என்ற சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தின் கீழ் விற்கப்பட்டது.

முக்கியமாகத் தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்தால் 8 வருடங்களில் முதிர்வடையும். ஒவ்வொரு ஆண்டுக்கு 2.50 சதவீதம் வட்டி தொகை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

வங்கிகள், பங்குச்சந்தை, அஞ்சல் அலுவலகம் வழியாக எல்லாம் சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்த பிறகு இடையில் வெளியேற வேண்டும் என்றாலும், அன்றைய தேதியின் விலைக்கு விற்றுவிட்டு பணத்தைப் பெற முடியும்.

தங்கம் நகைகளை வாங்குவதால் இந்தியாவுக்கு ஏற்படும் இறக்குமதி செலவுகளைக் குறைப்பதற்காக, சவரன் தங்கப் பத்திரம் திட்டம் நவம்பர் 2015-ம் ஆண்டு பிரதமர் மோடியில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version