பர்சனல் ஃபினான்ஸ்

எஸ்பிஐ வங்கியின் புதிய ஏடிஎம் விதிகள், கட்டணம் பரிவத்தனை வரம்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!

Published

on

எஸ்பிஐ எனறு அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி, ஜூலை 1-ம் தேதி முதல் புதிய ஏடிஎம் பரிவர்த்தனை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தால் மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி எஸ்பிஐ மற்றும் பிற ஏடிஎம் மையங்களில் அனைத்து ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களுக்கும் 3 மாதம் வரை தளர்வு அளித்து இருந்தது. ஜூன் மாதத்துடன் இந்த தளர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகள், கட்டணம், பரிவர்த்தனை வரம்பு போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

எனவே ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் விதிகள், கட்டணங்கள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்:

1) எஸ்பிஐ வங்கியில் சம்பள சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ மற்றும் பிற வங்கிகள் ஏடிஎம் என அனைத்திலும் வரம்பற்ற பரிவர்த்தனையை செய்துகொள்ளலாம்.

2) சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது சேமிப்பு கணக்குகளில் சராசரியாக 25,000 ரூபாய் வரை இருப்பை நிர்வகித்து வந்தால் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள், 3 பிற ஏடிஎம் பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல் கூடுதலாக 8 இலவச பரிவர்த்தனைகளை பெறுவார்கள். மெட்ரோ அல்லாத பிற நகரங்களில் உள்ளவர்களுக்கு எஸ்பிஐ ஏடிஎம்-ல் 5 இலவச பரிவர்த்தனைகளும், பிற வங்கி ஏடிஎம்களில் 5 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல் கூடுதலாக 10 இலவச பரிவர்த்தனைகளை இலவசமாகச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

3) எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 25,000 முதல் 50,000 ரூபாய் வரை நிர்வகிக்கும் வாடிக்கையாளர்கள் பிற ஏடிஎம் மையங்களில் கூடுதலாக 8 இலவச பரிவர்த்தனைகளை செய்துகொள்ளலாம். (3 மெட்ரோ நகரங்கள், 5 மெட்ரோ அல்லா நகரங்கள்)

4) எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 25,000 வரை தொடர்ந்து நிர்வகிக்கும் போது, எஸ்பிஐ வங்கியில் அணைத்து ஏடிஎம் சேவைகளையும் இலவசமாகப் பெறலாம்.

5) எஸ்பிஐ சேமிப்பு கணக்குகளில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்வகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ, பிற வங்கி ஏடிஎம் மையங்கள் என அனைத்திலும் வரம்பற்ற இலவச பரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடியும்.

6) இலவச பரிவர்த்தனைகளுக்கும் கூடுதலாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தால் 10 ரூபாய் + ஜிஎஸ்டி முதல் 20 ரூபாய் + ஜிஎஸ்டி வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

7) இலவச பரிவர்த்தனைகளுக்கும் அதிகமாக பேலன்ஸ் செக் செய்வது போன்ற நிதி அல்லா பரிவர்த்தனைகளைச் செய்யும் போது 5 ரூபாய் + ஜிஎஸ்டி முதல் 8 ரூபாய் + ஜிஎஸ்டி வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

8) ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது சேமிப்பு கணக்கில் போதிய இருப்பு இல்லை என்றால் 20 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.

9) பிற வங்கி ஏடிஎம்கள் மற்றும் சேமிப்பு கணக்கு வைத்துள்ள கிளையில் பரிவர்த்தனைகள் செய்யாத ஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு, 6 மெட்ரோ நகரங்களில் 10 இலவச எஸ்பிஐ ஏடிஎம் பரிவத்தனைகளும், 12 பிற நகர ஏடிஎம் பரிவத்தனைகளும் இலவசமாக வழங்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version