செய்திகள்

அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றிய என்ன? – விபரம் இதோ…

Published

on

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினார்கள். வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி தெலுங்கானா மாநிலத்திலும் கேபி அன்பழகனுக்கு சொந்தமான இடங்கள் இருப்பதாகவும் அந்த இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியானது.

மேலும் அன்பழகன் மட்டுமின்றி அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலம் உள்பட 57 இடங்களில் 200க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்நிலையில், இந்த சோதனையில் அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.1.60 கோடி பணமும், 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version