உலகம்

ஒரு ஆப்பிள் ஐபோன் திருடு போனால் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நஷ்டமாகுமா? அதிர்ச்சி தகவல்..!

Published

on

உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அம்சங்களை கொண்டது ஆப்பிள் ஐபோன் என்பதும் ஒரு ஆப்பிள் ஐபோனை அவ்வளவு எளிதில் ஹேக் செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் ஐபோனில் உள்ள கேட்ஜெட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதன் காரணமாக எவ்வளவு தான் முயன்றாலும் அதை ஹேக் செய்ய முடியாது என்றும் எனவே ஆப்பிள் ஐபோன் அதன் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பை தந்து கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் ஒரு ஆப்பிள் ஐபோன் திருட்டு போய்விட்டால் அந்த ஐபோனின் உரிமையாளர்களுக்கு லட்ச கணக்கில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என்பது ஒருசில சம்பவங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பார் கிளப்பில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது திடீரென அவரது ஆப்பிள் ஐபோன் திருடு போனது. இதனை அடுத்து ஒரு சில நிமிடங்களில் அவர் சுமார் 8 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் இழந்தார் என்றும் அதன் பிறகு அடுத்த சில நிமிடங்களில் வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் இழந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் வேறு சாதனங்களில் இருந்து தனது ஆப்பிள் கணக்கிற்குள் செல்ல முடியவில்லை என்றும் கூறப்பட்டது.

இது குறித்து ஆப்பிள் ஐபோன் ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது திருடு போன ஆப்பிள் ஐபோனின் பாஸ்வேர்டையும் அந்த திருடன் அறிந்திருப்பதாக கூறப்படுகிறது. பொது இடங்களில் நீங்கள் ஐபோனை பயன்படுத்தும் போது உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் பிறர் அறியும் வகையில் பயன்படுத்த கூடாது என்றும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போல உங்களிடம் பழகி நீங்கள் ஐபோனை பயன்படுத்தும் போது அந்த பாஸ்வேர்டை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள் என்றும் அதன் பிறகு உங்கள் ஐபோனை திருடி அவர்கள் உடனடியாக ஆப்பிள் கணக்கில் சென்று பாஸ்வேர்டை மாற்றி விடுகிறார்கள் என்றும் இதனால் ஆப்பிள் ஐபோன் உரிமையாளர்கள் ஆப்பிள் கணக்கில் கூட நுழைய முடியாத நிலை ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு வங்கி கணக்கில் நுழைந்து அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு அதிலுள்ள அனைத்து பணத்தையும் மோசடி செய்து விடுகிறார்கள் என்றும் எனவே பொது இடங்களில் ஆப்பிள் ஐபோனை பயன்படுத்தும் போது பாஸ்வேர்டை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விதமான சிக்கல்களை தடுப்பதற்கு ஃபேஸ் ஐடி அல்லது கைரேகை மூலம் பாஸ்வேர்டை பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஐபோன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version