இந்தியா

மோடி என்ற ஒரு சமூகமே இல்லை: ராகுல் காந்தியின் வழக்கறிஞர் அதிரடி!

Published

on

2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து அவர் எம்.பி பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

#image_title

2019-இல் கர்நாடகாவின் கோலார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரை வைத்திருக்கிறார்கள் என கூறியிருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியை கைது செய்யக்கோரி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் குமார் என்பவர் குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் ஆபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு ஜாமீன் வழங்கி, 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இந்த விவகாரம். இந்நிலையில் மோடி என்பது ஒரு சமூகமே இல்லை என ராகுல் காந்தியின் வழக்கறிஞர் விவரித்துள்ளார். எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயர் இருக்கிறது என ராகுல் காந்தி கூறியதில் மோடி என்பதை அந்த மோடி சமூகத்தினரை சொல்வதாக யூகிர்த்திருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் மோடி என்ற பெயரில் எந்த சமூகமும் இல்லை. மோத் வானிக், மோத் காஞ்ச்சி உள்ளிட்ட சமூகங்கள் தான் இருக்கின்றன. மோடி சமூகம் என்ற ஒன்று இல்லை. அப்படி ஒரு சமூகமே இல்லாதபோது எப்படி அதன் பிரதிநிதியாகச் சொல்லிக்கொண்டு ஒருவர் அதற்கு புகார் கொடுக்க முடியும்? சட்டத்தின் படி அடையாளம் காண முடியாத சமூகமாக இருக்கும் போது இவர்களால் புகாரளிக்கவே முடியாது என்றார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version