இந்தியா

ஆக்சிஜன் பற்றாக்குறை என கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது: நீதிமன்றம் உத்தரவு

Published

on

ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று கூறும் சமூக வலைதள பயனாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதை அடுத்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் தேவையான ஆக்சிஜன் இருப்பதாகவும் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வாதம் செய்துள்ளது. இந்தியாவில் நாளொன்றுக்கு 9,000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும் எனவே இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு தனது வாதத்தில் கூறியுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் அவ்வாறு மீறி நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு காவல்துறை அதிகாரிகள் மீது தொடரப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும் போது இந்தியாவில் ஆக்சிஜன் தயாரிப்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் ஆனால் தயாரித்த ஆக்சிஜனை உடனே பயன்படுத்த வேண்டும் என்பதால் தேவையான போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

Trending

Exit mobile version