தமிழ்நாடு

இரட்டை இலையும் தாமரையும் ஒன்றுதான்: நடிகை கவுதமி பிரச்சாரம்!

Published

on

ஏற்கனவே பாஜக கட்டுப்பாட்டில் தான் அதிமுக இருப்பதாகவும் தமிழக அரசு மத்தியில் பாஜக சொல்வதற்கு தலையாட்டி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதனை நிரூபிப்பது போல் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த நடிகை கௌதமி இரட்டை இலையும் தாமரையும் ஒன்றுதான் என்றும் இரண்டும் வேறு வேறு இல்லை என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றுராமநாதபுரம் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை கௌதமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது ’இந்த தேர்தலில் நல்லவர்களை பொறுப்புக்கு கொண்டுவரவேண்டும் என்றும் கெட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இரட்டை இலை மற்றும் தாமரை ஆகிய இரண்டும் வேறு வேறு இல்லை என்றும் இரண்டும் ஒன்றுதான் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க முதல்வர் பழனிசாமி தலைமையில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும் என்றும் கூறினார்.

மேலும் முதல்வர் பழனிசாமி ஆட்சி தொடர்ந்தால் 6 சிலிண்டர் இலவசமாக கிடைக்கும் என்றும் ரேஷன்கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூபாய் 1500 கிடைக்கும் என்றும் பெண் குழந்தை பிறந்தால் ஒரு லட்சரூபாய் வைப்பு நிதி திட்டம் கிடைக்கும் என்றும் கூறினார். கௌதமின் இந்தப் பேச்சுக்கு ராமநாதபுரம் பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version