தமிழ்நாடு

கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் மருத்துவமனைகளில் பெட் இல்லை: அதிர்ச்சி வீடியோ

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் மட்டும் 21 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தது

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்க மருத்துவமனையில் பெட் இல்லாத நிலை உள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பெட் தான் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தேவை என்பதால் அத்தகைய வசதியுடன் கூடிய பெட் பற்றாக்குறை இருப்பதால் பலமணிநேரம் மருத்துவமனையின் வெளியே ஆம்புலன்ஸில் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது

சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு பல ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் காத்துக் கொண்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோக்களும் இணையதளங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஆம்புலன்ஸில் இருக்கும் நோயாளிகளுக்கு அங்கேயே ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வரும் காட்சிகளும் பார்க்க முடிகிறது. எனவே கோடிக்கணக்கில் கையில் பணம் வைத்திருந்தாலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை எடுப்பதற்கு மருத்துவமனைகளில் இடமில்லை என்பதை மனதில் வைத்து கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதுதான் முதல் கடமையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது

அரசு மற்றும் தனியார் மருத்துவமனை முழுவதும் நிரம்பி விட்டதால் பொதுமக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டிய நிலை தற்போது தமிழகத்திற்கும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

 

 

Trending

Exit mobile version