சினிமா செய்திகள்

எலியின் அட்டகாசத்துக்கும் ஒரு காரணம் உண்டு; மான்ஸ்டர் திரை விமர்சனம்!

Published

on

ஒருநாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் மற்றும் சிஜி எலி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள மான்ஸ்டர் திரைப்படம் எப்படி இருக்குன்னு பார்ப்போமா?

தமிழ் சினிமாவில் இப்படியொரு படம் வந்ததே இல்லை என்றே சொல்லலாம். சின்ன ஈயை வைத்து ராஜமெளலி நான்ஈ படத்தை எப்படி அட்டகாசமாக கொடுத்தாரா? அதே போல தம்மாத்துண்டு எலியை வச்சிக்கிட்டு இயக்குநர் நெல்சன் எலி போற எடத்துக்கெல்லாம் போய் புகுந்து விளையாடிருக்காரு..

ஒரு நாள் கூத்து படத்துல பொண்ணுக்கு மாப்பிள்ளை கிடைக்காம இருக்கிறத அழகா காட்சியமைத்த நெல்சன், இந்த படத்துல எஸ்.ஜே.சூர்யாவுக்கு பொண்ணுக் கிடைக்காம இருக்க விஷயத்தை ஆரம்பத்திலேயே அழகா சொல்லிருக்காரு..

அதுக்கு சொந்த வீடு இல்லன்னு சொல்ற காரணமும் கச்சிதமா பொருந்துது.. இதனால், 50 லட்சத்துக்கு ஒரு பிளாட் வாங்குறாரு.. எஸ்.ஜே. சூர்யா, ஆனா, அந்த பிளாட்ல அவரால சந்தோசமா இருக்கவே முடியல, அதற்கு காரணம் ஒரு சின்ன எலி தான்.

எலியை புடிக்க இவரு பண்ற பிளான்லா எல்லாம் படு புத்திசாலித்தனமா எலி தப்பிக்கிறதும், எலியை போராடி புடிச்சுட்டு, அதை கொல்ல மனசு வராம அதை வெளியில விடுறதும், மறுபடியும் அந்த எலி வந்து எஸ்.ஜே.சூர்யா தனது வருங்கால மனைவியான பிரியா பவானி சங்கருக்காக 5 லட்சத்துக்கு வாங்கி வச்சிருக்க காஷ்ட்லி சோபா கடிச்சு குதறுறதுன்னு படம் செம்ம இண்ட்ரஸ்டிங்கா போர் அடிக்காம போகுது.

எலி தன்னோட வைரத்த தின்னுடுச்சி.. அத கொல்லணும்னு அத தேடி அலையுற கேங்ஸ்டர் அவரோட கூட்டம் செய்யுற வேலையெல்லாம் செம்ம சேட்டையாக இருக்கிறது.

கடைசியில அந்த எலியே சூர்யாவுக்காக சரண்டர் ஆகுறதும், ஏன் அந்த எலி அந்த வீட்ட விட்டு போகமாட்டேங்குது என்பதற்கான காரணத்தை உணர்வு பூர்வமாக இயக்குநர் சொல்லிருக்கிறது படத்திற்கு கூடுதல் பலமா இருக்கு..

மொத்தத்துல இந்த சம்மருக்கான சரியான படம்னா அது மான்ஸ்டர் தான். எலியோட சிஜி அவ்ளோ தத்ரூபமா நல்லா பண்ணிருக்காங்க..

சினி ரேட்டிங்: 3.75/5.

seithichurul

Trending

Exit mobile version