சினிமா செய்திகள்

‘வலிமை’ படத்தில் இரண்டு வில்லன்களா? டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டுவிட்டால் பரபரப்பு!

Published

on

‘வலிமை’ படத்தின் நாயகன் தல அஜித் என்பதும், இந்த படத்தின் வில்லன் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ‘வலிமை’ படத்தில் இரண்டு வில்லன்கள் இருப்பதாக இந்த படத்திற்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்த கலைஞர் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தல அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்திற்கு குரல் கொடுத்த டப்பிங் ஆர்டிஸ்ட் அலெக்சாண்டர் என்பவர் தனது டுவிட்டரில் ‘வலிமை’ படத்தில் டப்பிங் வாய்ஸ் கலைஞராக பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் நான் ‘வலிமை’ படத்தின் வில்லன்களில் ஒருவருக்கு குரல் கொடுத்துள்ளேன் என்றும் இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் வினோத் அவர்களுக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

வலிமை படத்தின் வில்லன்களில் ஒருவருக்கு வாய்ஸ் கொடுத்தேன் என்று அவர் கூறியதிலிருந்து ‘வலிமை’ படத்தில் இரண்டு வில்லன்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த இரண்டாவது வில்லன் யார் என்பதை படக்குழுவினர் சஸ்பென்சாக வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வெளியான ‘வலிமை’ டீசரில் கார்த்திகேயா மட்டும் தான் வில்லன் கேரக்டரில் நடித்து இருப்பது தெரியவந்ததால் இரண்டாவது வில்லன் கேரக்டரில் நடித்தது யார் என்ற தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version