சினிமா செய்திகள்

சிம்பு குரலில் விஜய்யின் வாரிசு பட பாடல்.. தீ.. இது தளபதி.. இணையத்தைத் தெறிக்கும் பாடல்!

Published

on

நடிகர் சிம்பு குரலில், விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் இடம்பெறும் “தீ.. இது தளபதி, பேரைக்கேட்டா விசிலடி” என்ற பாடல் ஞாயிற்றுக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது.

விஜய் இப்போது தில் ராஜ் தயாரிப்பில், தோழா படத்தை எடுத்த வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்குத் தமன் இசை அமைத்து வரும் நிலையில், அண்மையில் விஜய் குரலில் ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிம்புவும் வாரிசு படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என சில நாட்களாகச் செய்திகள் வெளியாகி வந்தன.

அதனை உறுதி செய்யும் வகையில் சிம்பு குரலில் வாரிசு படத்தில் இடம்பெறும், தீ.. இது தளபதி, பேரைக்கேட்டா விசிலடி பாடல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடலை பார்க்கும் போது சிம்பு இதில் பாடி ஆடி நடித்தும் உள்ளார் போல தொன்றுகிறது. படம் ரிலீஸ் ஆகும் போதுதான் சிம்பு பாட்டு மட்டும் பாடியுள்ளாரா, ப்ரோமோவுக்காக ஆடியுள்ளாரா அல்லது உண்மையிலேயே ஆடியுள்ளாரா என்பது தெரியவரும். கவிஞர் விவேக் இந்த பாடலை பாடியுள்ளார்.

வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இன்னும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய், அஜித் படங்கள் நேரடியாக மோத உள்ளன. எனவே ரசிகர்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. விரைவில் அஜித் நடிப்பில் துணிவு படத்தில் இடம்பெறும் சில்லா சில்லா படல் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வருகிறது.

தீ.. இது தளபதி.. பேரை கேட்டா விசில் அடி.. பாடல் வரிகள்

உன்ன பாத்து சிரிச்சா
அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு
அவமானம் கெடச்சா
அதில் கிரீடம் ஒன்னா உருவாக்கு
உன்ன குத்தி உலகமே
ஆனந்தம் அடையுமே
திருப்பி அடிக்கும் போது தான் யாரு நீன்னு புரியுமே
இட்ஸ் டைம் இட்ஸ் டைம் டு கிவ் இட்:யு பாக்:யு மாமே
இது திருப்பி இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
உடைஞ்ச மேகமே மா மழையை குடுக்குமே
கிழிஞ்ச வேதையிலே தான் காடு பொறக்குமே
புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே
தீ இது தளபதி
பேரை கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
ஸ்டன்சா
காயம் பொறுத்து சென்று பழகு முள் இருக்கும் வழியிலே
கூட நடந்த கூட்ட சத்தம் புல்லரிக்கும் உடலிலே
கால்கள் தடுக்கி மலையில் இருந்து கீழே போகும் நொடியிலே
கைகள் அசைத்து பாரு புதிய ரெக்கை பிறக்கும் வழியிலே
கண்ணீரோ
நீ உனக்கு சொல்லும் ஆராரோ
கண் தூங்கி எழுந்த பின்பு நீ வேறோ
உடைஞ்ச மேகமே மா மழையை குடுக்குமே
கிழிஞ்ச வெதையிலே தான் காடு பொறக்குமே
புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே
தீ இது தளபதி
பேரை கேட்டா விசில் அடி
தீ இது தளபதி உங்க நெஞ்சின் அதிபதி

seithichurul

Trending

Exit mobile version