வணிகம்

வெளி உணவுகளை எடுத்துவரத் தடை விதிக்க திரையரங்குகளுக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

Published

on

வெளி உணவுகளை எடுத்துவருவதற்குத் தடை விதிக்க திரையரங்குகளுக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரை அரங்குகளில் வெளி உணவுகளை எடுத்து வரை தடை உள்ளது.

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பை வெளியிட்ட உச்ச நீதிமன்றம், ஆரோக்கியமான உணவை எடுத்துச் செல்ல திரையரங்குகள் ஒன்றும் உடற்பயிற்சி நிலையம் இல்லை.

திரையரங்குகள் தனியாருக்குச் சொந்தமான கட்டிடம் அல்லது சொத்து. அதன் உரிமையாளர்களுக்கு அங்கு எந்த உணவை அனுமதிக்க வேண்டும் என்ற உரிமை உண்டு என உத்தரவிட்டுள்ளது.

மேலும் திரை அரங்குகள் ஆரோக்கியமான குடிநீரை இலவசமாக வழங்க வெண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளதாக, நீண்ட காலமாகத் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதற்கு திரையரங்கு உரிமையாளர்களும் இங்கு உள்ள உணவுகள் பெருபாலும் திரைப்படத்தின் விளம்பர நேரத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் தங்களுக்கு பெறும் செலவு ஏற்படுவதுடன், சில நேரங்களில் இழப்பும் எற்படுகிறது. அவற்றை ஈடு செய்யவே இங்கு உணவு பொருட்கள் விலை அதிகமாக உள்ளன என கூறுகின்றனர்.

Trending

Exit mobile version