செய்திகள்

100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்பட அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு….

Published

on

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது. எனவே, இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கொரோனா படிப்படியாக குறைந்தது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழே சென்றுள்ளது.

இந்நிலையில், சில புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திரையரங்கில் இதுநாள் வரை 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், வருகிற 16ம் தேதி முதல் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்களிலும் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதோடு, வணிக நிறுவனங்கள், மால்கள் ஆகியற்றுக்கும் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. வலிமை, ஆர்.ஆர்.ஆர், டான், எதற்கும் துணிந்தவன் போன்ற புதிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு தியேட்டர் அதிபர்களுக்கும், திரையுலகினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version