தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் தியேட்டர்கள், மால்: ரூ.2500 கோடியில் தயாராகிறது!

Published

on

சென்னை விமான நிலையத்தில் ரூ.2500 கோடி செலவில் தியேட்டர் மற்றும் மால்களுடன் நவீன மயமாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை விமான நிலையத்தை நவீனமாகும் பணிகள் 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. 2500 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த முனையம் கட்டும் பணி தொடங்கிய நிலையில் தற்போது அந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் ஒருசில மாதங்களில் பொதுமக்கள் மற்றும் விமான பயணிகளின் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கூறப்படும் இந்த ஒருங்கிணைந்த விமான நிலையத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம், 5 திரையரங்குகள், ஹோட்டல்கள், கடைகள், 2100 கார்களை நிறுத்தும் பார்க்கிங் பகுதி அமைந்துள்ளது.

இந்த பணிகள் 85% முடிந்துவிட்டதாகவும் இனிமேல் சென்னை விமான நிலையத்திற்கு விமான பயணிகள் மட்டுமின்றி திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களும் மால்களுக்கு செல்பவர்களும் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விமானத்துக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மால்களில் சுற்றிப் பார்த்து நேரத்தை போக்கலாம் என்பதும், திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு பின்னர் விமானத்தைல் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் சென்னை விமான நிலையம் விரைவில் சொர்க்கபுரியாக மாற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version