தமிழ்நாடு

50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பள்ளிகள் திறக்கவும் திரையரங்குகளில் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான தகவல்கள் இதோ:

* செப்டம்பர் 1 முதல் 9,10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்க அனுமதி.

* வரும் 23ஆம் தேதியில் இருந்து 50 % பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி.

* அனைத்து கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி

* கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி. உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் செயல்பட அனுமதி.

* தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

* ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி.

* மழலையர் காப்பகங்கள் இயங்க அனுமதி. நீச்சல் குளங்கள் 50 % பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி

* தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி.

* அங்கன்வாடி மையங்கள் செப்டம்பர் 1 ஆம்தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதி.

seithichurul

Trending

Exit mobile version