உலகம்

ராஜஸ்தானின் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்!

Published

on

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் துணை முதல்வராக தேர்வாகி இருக்கும் சச்சின் பைலட் அம்மாநிலத்தின் இளமையான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் தொடர்வார்.

உத்தர பிரதேச மாநிலம் ஷரன்பூரில் 1977ல் பிறந்தார் சச்சின் பைலட். இவருக்கு 41 வயதுதான் ஆகிறது. இவர் குடும்ப உறுப்பினர்கள் பரம்பரை பரம்பரையாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள். மறைந்த முன்னாள் லோக் சபா உறுப்பினரான இவரின் அப்பா ராஜேஷ் பைலட் காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார்.

அது தற்போது தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. இந்த நிலையில் கடின உழைப்பிற்கு பலனாக தற்போது ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version