உலகம்

உலகின் அதிகம் வருமானம் பெரும் அதிபர்கள், பிரதமர்கள்.. இந்திய பிரதமருக்கு எந்த இடம்?

Published

on

உலகின் அதிக வருமானம் பெறும் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் பட்டியல் தற்போது வந்துள்ள நிலையில் முதல் 10 இடங்களில் இந்திய பிரதமரின் பெயர் அதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பல நிறுவனங்களின் சி.இ.ஓக்களுடன் ஒப்பிடும் போது அதிபர்கள் மற்றும் பிரதமர்களின் சம்பளம் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, எல்லையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆகிய கடினமான வேலைகள் செய்யும் பிரதமர் மற்றும் அதிபர்கள் பெரும் சம்பளம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்:

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், உலக அளவில் வேறு எந்த அரசாங்கத் தலைவரையும் விட அதிக வருமானம் பெறுகிறார். அவர் ஆண்டுக்கு சுமார் $1.6 மில்லியன் சம்பாதிக்கிறார்.

ஹாங்காங் பிரதமர் கேரி லாம்:

ஹாங்காங்கின் பிரதமர் கேரி லாம் இரண்டாவது இடத்தில் உள்ளார். சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, அவர் ஆண்டுக்கு சுமார் $672,000 சம்பாதிக்கிறார்

சுவிட்சர்லாந்து அதிபர் இக்னாசியோ காசிஸ்:

ஜனவரி 2022 முதல் சுவிஸ் கூட்டமைப்பின் தலைவரான இக்னாசியோ காசிஸ், ஆண்டுதோறும் சுமார் $483,000 சம்பாதிக்கிறார். சிறந்த ஊதியம் பெறும் உலகத் தலைவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன்:

உலகின் வல்லரசின் தலைவராக இருப்பதால், அதிக வருமானம் ஈட்டும் அரசாங்க அதிகாரியாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இருக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அவர் ஆண்டு சம்பளம் $400,000 மட்டுமே சம்பளம் பெற்று இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். ஆனாலும் அவருக்கு கூடுதலாக $50,000 அவரது ஆடம்பர வசதிக்கும் பாதுகாப்பிற்கும் செலவு செய்யப்படுகிறது. குறிப்பாக அவர் தங்கியிருக்கும் வெள்ளை மாளிகை மற்றும் ஏர்ஃபோர்ஸ் ஒன் போன்ற மிக ஆடம்பரமான வசதிகளை பெற்றது.

ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ்:

ஐந்தாவது அதிக ஊதியம் பெறும் உலகத் தலைவர் ஆஸ்திரேலியாவின் பிரதமரும், தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவருமான அந்தோனி அல்பானீஸ் ஆவார். அவரது சம்பளம் $378,400.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ:

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆண்டுதோறும் $267,000 சம்பாதித்து, உலகின் சிறந்த ஊதியம் பெறும் தலைவர்களின் பட்டியலில் 12வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்:

இங்கிலாந்தின் பிரதம மந்திரி ரிஷி சுனக் ஆண்டுதோறும் சுமார் £161,401 ($186,685) சம்பாதிக்கிறார். தி சண்டே டைம்ஸின் கூற்றுப்படி, அவர் உலகின் 222 வது பணக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான ஊதியம் பெறும் தலைவர்கள்:

சில உலகத் தலைவர்கள் மிகவும் மோசமாக ஊதியம் பெறுகிறார்கள். லாவோஸ் ஜனாதிபதி $1,630 மட்டுமே சம்பளமாக பெறுகிறார். கியூபாவின் ஜனாதிபதி, மிகுவல் தியாஸ்-கேனல் ($360 சம்பளம் பெறுகிறார். ஈரானின் தலைவர் அலி கமேனி சம்பளமே பெறுவதில்லை என்று கூறப்படுகிறது.

PM Modi interviewஇந்திய பிரதமர் $2500 மற்றும் எம்பிக்கான சம்பளத்தையும் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version