கிரிக்கெட்

INDvENG – “பைத்தியக்கார உலகம்…”- இங்கி., – இந்தியா தொடர் குறித்து மைக்கெல் வாகன் கடும் விமர்சனம்!

Published

on

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதையொட்டி இரு நாட்டு வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி பெற்ற பெருமிதத்தோடு, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்கும் இந்தியா. இதனால் இந்த தொடர் குறித்தான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மெக்கெல் வாகன், இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தை, அணித் தேர்வுக்காக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து சார்பில் விளையாடப் போகும் அணியை அந்நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜோ ரூட், ஆர்ச்சர், மோயீன் அலி, ஆண்டர்சன், டோம் பெஸ், பிராட், ரோரி பர்ன்ஸ், பட்லர், ஜாக் கிராலி, பென் ஃபோக்ஸ், டேன் லாரன்ஸ், ஜாக் லீச், டோம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஓலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணி சில நாட்களுக்கு முன்னர் தான் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்தது. இந்த தொடரில் இங்கிலாந்து சார்பில் அதிரடியாக விளையாடியவர் ஜானி பேர்ஸ்டோ. குறிப்பாக ஆசிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் பேர்ஸ்டோ. அவரை இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் ரெஸ்ட் செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்.

இதனால் கொதிப்படைந்த வாகன், ‘இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முதல் 3 பேட்ஸ்மேன்களில் இந்தியச் சூழலில் மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவரும், சாந்தமாக பவுலர்களை எதிர்கொள்ளக் கூடியவரும் இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டுகளில் ரெஸ்ட் செய்யப்பட்டு உள்ளார். உலகின் சிறந்த அணிக்கு எதிராக இப்படியான தேர்வை இங்கிலாந்து செய்துள்ளது. அதிகாரப்பூர்வமாக இது பைத்தியக்கார உலகம் தான்’ என்று நக்கல் கலந்த தொனியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Trending

Exit mobile version