உலகம்

இலங்கைக்கு எதிராக நடந்த ஐ.நா. வாக்கெடுப்பு: இந்தியா ஆப்செண்ட்!

Published

on

இலங்கையில் எல்.டி.டி.ஈ உடனான இறுதி யுத்தம் 2009-ல் முடிவடைந்த நிலையில் அந்த இறுதி யுத்தத்தின் போது பல லட்சம் தமிழர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர். இதுகுறித்து இலங்கை ராணுவம் மீது தீர்மானம் இயற்ற ஐ.நா. முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக நடத்தப்படும் இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள பல கட்சிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தன.

இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக, மதிமுக உட்பட பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் இந்த தீர்மானம் சற்றுமுன் நடந்தபோது இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் வாக்கெடுப்பில் இந்தியா ஆப்சென்ட் ஆனதாக தகவல் வெளிவஎந்துள்ளது. அதாவது போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீது நடந்த சோதனை வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இலங்கைக்கு எதிராக வாக்களித்தால் இலங்கையை பகைத்துக் கொள்ள நேரிடும் என்று ஆனால் அதே நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தால் உள்ளூர் அரசியல் கட்சிகளின் பகையை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியா வாக்களிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version